அரசு நடு நிலைப்பள்ளியில் நடந்த உணவு திருவிழா.. மாணவர்களை பாராட்டிய  MLA அனிபால் கென்னடி! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி உப்பளம் தொகுதியில் காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளியில்  நடந்த உணவு திருவிழாவில் அனிபால் கென்னடி MLA அவர்கள் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டை பகுதியில் உள்ள தாவிதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது.இந்த  விழாவில் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள்  கலந்துகொண்டு, மாணவர்கள் தயார் செய்த  சிறுதானிய உணவுகளான,  வரகு பொங்கல்,கேழ்வரகுகூழ், கேழ்வரகுஅடை,சோளதோசை, தினைப்பாயாசம், சாமைபொங்கல்,கம்புசோறு,சிறுதானியகுழிப்பணியாரம்,கேழ்வரகுகளி,கம்புகூழ்,சிறுதானியதின்பண்டங்கள்,எள்ளுஉருண்டைசிறுதானிய பிஸ்கட் வகைகள் போன்றவற்றை ருசித்துப் பார்த்து மாணவர்களை பாராட்டினார். 

 இதையடுத்து சிறுதானிய உணவின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றி மாணவர்களிடம் உரையாடினார் அனிபால் கென்னடி ஏம் எல் ஏ . ஆரோக்கியமான சத்து மிகுந்த உணவை உண்ண வேண்டிய முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார். உணவு திருவிழாவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களை கொடுத்து பாராட்டினார்.

மேலும் முன் மழலையர் மாணவர்களின் கற்றல் திருவிழாவிலும் கலந்து கொண்டு மாணவர்களின் கற்றல் திறன்களை கண்டு மாணவர்களை வெகுவாக பாராட்டி பரிசளித்தார். விழாவிற்கு பொறுப்பாசிரியை வி. வசுதா தலைமை தாங்கினார். ஆசிரியர் இரா. ஆனந்தராஜ் வரவேற்புரை வழங்கினார்.  முடிவில் ஆசிரியை  மனோரஞ்சிதம் நன்றி உரை வழங்கினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Food festival at Government Middle School. MLA Anibal Kennedy congratulates students


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->