தெலுங்கில் வெற்றியடைந்த ‘சரிபோதா சனிவாரம்’...! தோல்வியை தழுவிய ‘தி கோட்’..! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘தி கோட்’. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி சௌத்திரி, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ள பாடல்கள் ரசிகர்களிடையே  கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் ‘தி கோட்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூல் நன்றாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதன் வகையில் ‘தி கோட்’ திரைப்படம் தெலுங்கு திரையுலகில் படுதோல்வியை அடைந்து இருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ‘தி கோட்’ படத்தின் பதிப்பை வெளியிட்டது. சுமார் 12 கோடி ரூபாய்க்கு தெலுங்கில் இந்த உரிமம் பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனிடையில்,  படம் இறங்கிய முதல் இரண்டு நாட்களில் தெலுங்கு திரையுலகில் ரூபாய் 5 கோடி வசூல் செய்துள்ளது. அதன் பின் ரசிகர்கள் யாருமே ‘தி கோட்’ திரைப்படத்தை அதிகமாக காணச்செல்லவில்லை.. இதனால், இப்படம் தெலுங்கில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த ‘தி கோட்’ பட தோல்வியால் நடிகர் நானியின் படத்துக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நடிகர் நானி நடித்துள்ள ‘சரிபோதா சனிவாரம்’ திரைப்படம் ஆக 29-ம் தேதி வெளியானது. நல்ல வசூல் செய்து வந்த நிலையில் , ‘தி கோட்’ திரைப்படம் வெளியானதால் பல திரையிரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. 

தற்போது ‘தி கோட்’ தோல்வி அடைந்ததால் பல்வேறு திரையரங்குகளில் ‘சரிபோதா சனிவாரம்’ மீண்டும் படத்தினை திரையிட்டுள்ளனர். இதனால், மீண்டும் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது ‘சரிபோதா சனிவாரம்’ படக்குழு.

‘தி கோட்’  படம் கேரளா மற்றும் கர்நாடகாவில் வசூல் மோசமில்லை எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனாலும், வரும் நாட்களில் வசூல் நிலவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியான பின்புதான் முழுமையான உண்மை என்னவென்று தெரியவரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saripodhaa Sanivaaram was a hit in Telugu The Goat who embraced failure


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->