டான்சிங் ரோஸ் ஷபீர் நடிக்கும் பர்த்மார்க்! - Seithipunal
Seithipunal


சார்பட்டா பரம்பரை புகழ் டான்சிங் ரோஸ் நடிப்பில் வெளியாக உள்ள படம் பர்த்மார்க். இந்த படத்தில் டான்சிங் ரோஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் எழுதி தயாரித்து இயக்கும் இந்த படத்தில் மிர்னா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஷபீர் நடிப்பில் வெளியாகிய சார்பட்டா பரம்பரை பட்டி தொட்டி எங்கும் வசூல் வேட்டையில் பின்னி எடுத்தது.

அனைவருக்கும் பிடித்த வகையில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய சார்பட்டா பரம்பரை படத்தில் பல கதாபாத்திரங்கள் பேசப்பட்டது. அதில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் மிகுந்த அளவில் மக்களிடையே வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. நடிகர் ஷபீர் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு விஷாய் சந்திரசேகர் இசையமைக்கிறார். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்து வெளியாக இருக்கும் இந்த படத்தின் காட்சிகள் தமிழ்நாடு கேரளா சார்ந்த பல ஊர்களில் காட்சியமைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பிஆர் வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஷபீர் கல்லாரக்கால் நடித்து வெளிவந்த கடைசி படம் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்தின் மீதான ஆர்வம் திரைத்துறையினருக்கு அதிகமாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். இது 90களில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sarpatta fame Shabeers Farthmaarc


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->