பெரும் சோகம்.. நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காலிங்கராயர் வயது மூப்பின் காரணமாக காலமானார்.

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக உயர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சத்யராஜ். இவர் ஹீரோ, வில்லன், காமெடி, ஆக்சன் என அனைத்து கதாபாத்திரங்களையும் கச்சிதமாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்.

அதன்படி தமிழ் சினிமாவில்
கடந்த 45 ஆண்டு காலமாக வளம் வருகிறார். இந்த நிலையில் அவரது தாயார் நாதாம்பாள் (94) கோயம்புத்தூரில் வசித்து வந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் தனது தாயாரின் இறுதி சடங்கிற்காக கோவை விரைந்துள்ளார். இதனையடுத்து நடிகர் சத்யராஜின் தாயார் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sathyaraj mother passed away


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->