டெல்லிக்கு அடுத்த ஆபத்து!...கடும் வேதனையில் பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் யமுனை ஆற்றின் நீர், பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள  காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆறு பாய்கிறது. இதற்கிடையே, நாளுக்கு நாள் டெல்லியில் காற்று மாசு பிரச்சினை  தீவிரமடைந்து வரும் நிலையில்,  காலிந்தி கஞ்ச் பகுதியில் உள்ள  யமுனை ஆற்றில், ரசாயன நுரை மிதந்து செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பனிப்படலம் போல் வெள்ளை நிறத்தில் ஆற்றின் மேல் மிதந்து செல்லும் ரசாயன நுரை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக யமுனை ஆற்றின் நீர், பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், டெல்லியில் இத்தகைய மாசுபாடுகள் ஏற்படுவது தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது பா.ஜ.க. கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.

அந்த வகையில், பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளதாவது, டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக மாசுபாட்டை கட்டுப்படுத்த ஆம் ஆத்மி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், காற்று மற்றும் யமுனை நதி மாசடைந்து உள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The next danger for delhi hard public in agony


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->