8 லட்சம் மதிப்புள்ள பயோ டீசல் கடத்தல் - 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்களை குறி வைத்து கள்ளசந்தையில் பயோ டீசல் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு மீன் பிடித்துறை முகத்திற்கு பயோ டீசல் விற்பனைக்கு வருவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, மீன்பிடி துறைமுகத்திற்கு உள்ளே நுழைந்த லாரி ஒன்றை போலீசார் சுற்றி வளைத்து சோதனையிட்டனர். அந்த லாரியில், தென்காசி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடியில் விற்பனை செய்வதற்காக உரிய ஆவணங்களின்றி 65 பேரல்களில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள பயோ டீசல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. 

இதை்தொடர்ந்து, போலீசார் அவற்றை பறிமுதல் செய்து லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த கந்தன் மற்றும் கே.வி.கே. நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் இரண்டு பேரையும் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட பயோ டீசல் மற்றும் கைதான இரண்டு பேரையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
---------------------------


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biodiesel seized in thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->