பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடிக்கும் சீமான்! எந்த திரைப்படத்தில் தெரியுமா?
Seeman plays Pradeep Ranganathan father
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கவிருந்த படம் சில பிரச்சனைகள் கைவிடப்பட்டது. அதனால் தற்போது விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவை ஈஷா மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படபிடிப்பில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் சீமான் இயற்கை விவசாயம் செய்பவராக நடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Seeman plays Pradeep Ranganathan father