ஆதிபுருஷ் படத்தை பங்கமாக கலாய்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்.. வைரலாகும் பதிவு.! - Seithipunal
Seithipunal


ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படம் ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சையிப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.

3டியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கடந்த ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய நிலையில், ரசிகர்கள் உற்சாகமாக திரைப்படத்தை பார்த்து வருகின்றனர்.

 இதில், படக்குழு  ஏற்கெனவே அறிவித்தபடி ஒவ்வொரு தியேட்டரிலும் அனுமனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆதிபுருஷ் திரைப்படம் ஒரு சில பகுதிகளில்  கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆனால், சில இடங்களில் ஆதிபுருஷ் படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. சில முக்கிய பிரபலங்களே இந்த திரைப்படம் குறித்து விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், இந்த திரைப்படம் இதுவரை ரூ.410 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக் ஆதிபுருஷ் திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் "ஆதிபுருஷ் படத்தை பார்த்த பிறகு தான் தெரிகிறது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று தெரியவந்தது" என பதிவிட்டுள்ளார். தற்போது இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sehwag trolls Adiprush movie in Twitter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->