கனடாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஜஸ்டின் ட்ரூடோ..!
Justin Trudeau resigned as Prime Minister of Canada
கனடா நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அரசியல் நெருக்கடி மற்றும் சொந்த கட்சிக்குள்ளேயே நெருக்கடி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 09 ஆண்டுகளாக வகித்து வரும் கனடாவின் ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
ட்ரூடோவின் விலகல், அக்டோபரின் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியிடம் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என் கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
2013 ஆம் ஆண்டு லிபரல் கட்சியின் தலைவராக ட்ரூடோ பொறுப்பேற்றார். அப்போது கட்சி ஆழ்ந்த சிக்கலில் இருந்தபோது முதல் முறையாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் மூன்றாவது
இடத்திற்குத் தள்ளப்பட்டது.
அத்துடன், எதிர்வரும் காலங்களில் லிபரல் கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாமல் போகும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Justin Trudeau resigned as Prime Minister of Canada