விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்! திரையரங்குகளுக்கு தணிக்கை குழு அறிவுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


சான்றிதழ் வழங்கப்பட்ட திரைப்படங்களை பார்க்க 18 வயதுக்குட்பட்டோரை அனுமதிக்க கூடாது என்று திரைப்பட தணிக்கைக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

திரைப்படங்களுக்கு U, U/A, A என மூன்று விதமான சான்றிதழ்களை திரைப்பட தணிக்கைக்குழு வழங்கி வருகிறது. U சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை குழந்தைகளுடன் குடும்பத்தினரோடு சென்று அனைவரும் பார்க்கலாம். U/A சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் குழந்தையுடன் சென்று பார்க்கலாம். ஆனால் வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் இடம்பெறும் படங்களுக்கு A சான்றிதழ் தணிக்கை குழுவால் வழங்கப்படும். இந்த திரைப்படங்களை பார்க்க 18 வயது வயதுக்கு குறைவானவர்களை அனுமதிக்க கூடாது என விதி உள்ளது.

இது தொடர்பாக தணிக்கை குழு திரையரங்குகளுக்கு அனுபியுள்ள சுற்றறிக்கையில், A சான்றிதழ் திரைப்படங்களுக்கு 18 வயதிற்கு குறைவானவர்களை அனுமதிக்க கூடாது என்ற விதி முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என புகார்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sensor board restrictions for theatre


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->