சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபர் - வீட்டோடு கொளுத்திய பொதுமக்கள்..! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அடிலாபாத் மாவட்டம் குடிஹத்னூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால், கதறிய சிறுமி வாலிபர் பலாத்காரம் செய்தது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். சிறிது நேரத்திலேயே இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியது. இதைக்கேட்டு ஆத்திரமடைந்த கிராமமக்கள் வாலிபரின் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கினர்.

அவர்களிடமிருந்து தப்பிய வாலிபர் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். சிறுமியின் உறவினர்கள் வாலிபரை வெளியே வருமாறு கத்தி கூச்சலிட்டனர். ஆனால், அவர் வெளியே வராததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் வாலிபர் உள்ளே இருக்கும்போதே வீட்டுக்கு தீ வைத்தனர். 

இதில் தீ வீடு முழுவதும் பரவியதால் படுகாயமடைந்த வாலிபர் வீட்டில் மயங்கி விழுந்தார். இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உறவினர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் வாலிபர் வீடு மீது கற்களை வீச தொடங்கினர். பின்னர் போலீசார் மயங்கி கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதைப்பார்த்து மேலும் ஆத்திரமடைந்த கிராமமக்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கிராம மக்களை கட்டுப்படுத்தினர். போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man injured for peoples fire him house in telungana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->