பிரபல யூடியூபரை கரம் பிடித்த சீரியல் நடிகை! - Seithipunal
Seithipunal


 பிரபல யூடியூபர், சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகை ஜனனி பிரதீப் கண்மணி, சிவா மனசுல சக்தி உள்ளிட்ட தொடரின் மூலம் பிரபலமானார். இவர் வித்யா நம்பர் ஒன் என்ற தொடரில் நடித்து வந்த பிரபல  யூடியூபரான இனியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இவர்களது திருமணத்தில் தொலைக்காட்சி மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சியில் இனியன் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலமானார். 

இவர்களது திருமணத்தில் சீரியல் நடிகை ஹரிப்பிரியா, பாடகர் ஷாம் விஷால் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

இந்த தம்பதியினருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Serial actress married popular YouTuber


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->