மகனின் பிறந்தநாளை மாஸாக கொண்டாடிய பிரபல சீரியல் ஜோடி.!
serial actress senthil srija son bday celebration
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த சீரியல் ‘சரவணன் - மீனாட்சி’. இதில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் பலருக்கும் பிடித்தமான ஜோடியாக செந்தில்-ஸ்ரீஜா மாறினர். சீரியல் மூலமாக இவர்களிடையே காதல் ஏற்பட்டு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்குத் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில், கடந்த வரும் இந்த தம்பதியினருக்கு மகன் பிறந்தார். அவருக்கு ஸ்ரீ வல்லப் தேவ் எனப் பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில், மகனின் முதல் பிறந்தநாளை செம மாஸாகக் கொண்டாடி இருக்கின்றனர் இந்தத் தம்பதியினர்.

மேலும், இவர்கள் மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அதில், நீல வண்ண ஆடையை செந்தில், ஸ்ரீஜா மற்றும் குழந்தை என்று மூவரும் அணிந்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் ’எங்கள் மகனுக்கு இது முதல் பிறந்தநாள். இந்த நாளுக்காகத்தான் நாங்கள் நீண்ட நாட்கள் காத்திருந்தோம். விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி’ என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் செந்தில்.
English Summary
serial actress senthil srija son bday celebration