பாலியல் புகார்!...பிரபல நடிகர் ஜாமீனில் விடுதலை! - Seithipunal
Seithipunal


கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிட்டி  அறிக்கை  மலையாள திரையுலகையே உலுக்கியுள்ள நிலையில்,  பல நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது மேலும் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மலையாள நடிகர் எடவெலா பாபு மீது கொச்சியை சேர்ந்த நடிகை அளிக்கப்பட புகாரின் அடிப்படையில், இவர் மீது பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு மற்றும் பெண்களை இழிவாக பேசுவது ஆகிய பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் நேற்று அவரை கைது செய்து 3  மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 

பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாபு மீது புகார் அளித்த அதே நடிகை தான், நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பில்ல ராஜூ, வக்கீல் சந்திரசேகரன் மற்றும் படத்தயாரிப்பாளர்கள் நோபிள் மற்றம் விச்சு ஆகியோர் மீது வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sexual complaint famous actor released on bail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->