விக்ரம் படம் பார்க்க தியேட்டருக்கு மகளுடன் சென்ற ஷாலினி..! பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு கூலாக பதில்.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. இவர் தனது சிறுவயது முதல் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

இதன்பின் பிரபல நடிகரான அஜித்தை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் ஷாலினி எந்த படத்திலும் நடிக்கவில்லை, அதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில் ஷாலினி தனது கணவரின் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அத்துடன் கணவரின் படம் மட்டுமல்லாமல் மற்ற ஹீரோக்கள் படமும் எவ்வாறு இருக்கிறது என்பதை தவறாமல் திரையரங்கிற்கு சென்று பார்த்துவிடுவார்.

பெரும்பாலும் காதல் காட்சிகள் நிறைந்த திரைப்படத்தை முதல்நாள் பார்த்துவிடுவார். அதுபோல நேற்று திரையரங்கில் வெற்றிகரமாக வெளியிடப்பட்ட கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தை பார்க்க ஷாலினி தனது மகள் அனுஷ்காவுடன் தியேட்டருக்கு சென்றுள்ளார். இதனை கண்ட பத்திரிக்கையாளர்கள் ஆர்வமிகுதியில் அவரிடம் உள்ளே செல்வதற்கு முன்பே, படம் எப்படி இருக்கிறது? என்று கேட்டுள்ளனர். இதற்கு கோபப்படாமல் ஷாலினி கூலாக "நான் இன்னும் படம் பார்க்கவில்லை" என்று கூறி விட்டு நகர்ந்து சென்றுவிட்டார்.

பொதுவாக படத்தை பார்ப்பதற்கு முன்னர் அல்லது பார்த்தபின் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை பிரபலங்கள் தவிர்த்துவிடுவர். ஆனால் ஷாலினி அவ்வாறு செய்யாமல் கூலாக பதில் சொன்ன விதம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shalini going to theatre for watching vikram movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->