பீஸ்ட் படத்தை குடும்பத்தோடு சென்று பார்த்த ஷாலினி.! உற்சாகமான தளபதி ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய், செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் தான் பீஸ்ட். அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது. 

இது குறித்து நெகடிவ் விமர்சனங்கள் நிறைய எழுந்து வருகிறது. ஆனால், இதனால் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகை ஷாலினி தனது மகள், மகன் இருவருடனும் சேர்ந்து பீஸ்ட் படத்தை பார்த்துள்ளனர்.

இவர்கள் திரைப்படத்தை பார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தாலும் கூட அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வதுதான் வழக்கம். 

அப்படிப்பட்ட நிலையில், ஷாலினி பீஸ்ட் படத்தை பார்த்து இருப்பதைக் கண்டு அவர்கள் தங்களது சண்டை சச்சரவுகளை குறைத்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shalini in beast Movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->