சினிமாவை விட்டுட்டு, அந்த தொழில் செய்யப்போன ஷாருக்கான்.. காப்பாற்றிய பதான் படம்.! - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஷாருக்கான் தற்பொழுது இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 25ல் இந்தியாவில் 8000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில், நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.

பதான் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் மழையை கொட்டி தீர்த்து வருகிறது. இத்தகைய நிலையில், பதான் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் பட குழுவினரால் வெளியிடப்பட்டு வருகின்றது. அதன்படி, பதான் படம் இதுவரை 540 கோடிக்கு மேல் வசூலித்ததாக தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், படத்தின் வெற்றி விழா நேற்று நடந்தது. இதில் நடிகர் ஷாருக்கான் மற்றும் பட குழுவினர் கலந்து கொண்டனர். அதில், பேசிய ஷாருகான், "சில வருடங்களாகவே எந்த படத்திலும் என்னால் நடிக்க முடியவில்லை. என் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தது. 

இதன் காரணமாக சினிமாவை விட்டு விலகிடலாம் எனும் முடிவில் இருந்தேன். ஒரு ஓட்டல் பிசினஸ் துவங்க வேண்டும் என்று சமையல் கூட கற்றுக் கொண்டேன். இருப்பினும் பதான்ப்படம் எனக்கு சினிமாவில் மீண்டும் வாழ்க்கை கொடுத்துள்ளது." என்று உருக்கமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sharuk khan speech Pathan success meet


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->