கொஞ்சம் தூரமா வச்சி போட்டோ எடுத்தா என்ன? ஷிவானியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!
Shivani dog Close up selfie viral
தமிழில் நிறைய சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். விஜய் டிவியின் பகல் நிலவு சீரியல் இவருக்கு மிக முக்கியமான சீரியலாகும். அதன் பின், அவருக்கு பிக்பாஸில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பை ஷிவானி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியில் வந்த சிவானி சில நாட்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். சமீபத்தில் அவருக்கு கமலஹாசனின் விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் போலீஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை ஷிவானி நாராயணன் வெளியிட்டு வருவார்.
அந்த வகையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷிவானி நாராயணன் தனது நாயுடன் க்ளோசப்பில் செல்ஃபி எடுத்து வைத்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் கொஞ்சம் தூரமா நாய தள்ளி வைக்கலாம்ல்ல.. என்று கழுவி ஊற்றி கமெண்ட் போட்டு வருகின்றனர்.
English Summary
Shivani dog Close up selfie viral