த. வெ.க தலைவர் விஜய் எதார்த்தமானவர் - பரபரப்பை கிளப்பிய சீமான்.!!
ntk leader seeman speech about tvk leader vijay
இன்று சென்னையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:- "வெற்றி, தோல்வியை தாண்டி தனித்து போட்டியிடும் கட்சி தான் நாம் தமிழர் கட்சி. நாங்கள் மக்களை தேடி சென்று மக்களுக்காக அரசியல் செய்கிறோம்.
கூட்டணி எங்கள் கொள்கை அல்ல. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பி தான் உள்ளது. அடுத்தவர் கால்கள், தோள்களை நம்பினால் எங்கள் இலக்கின் பயணத்தை அடைய முடியாது. ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான். ஆனால், நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு ஒரே நிலைப்பாடு தான்.

தொடர்ச்சியாக நான்கு முறை 2 சட்டமன்ற தேர்தல், 2 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 5- வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 பெண்கள், 117 ஆண்கள் போட்டியிடுவார்கள். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எதார்த்தமானவர். விஜய் இப்தார் நோன்பில் பங்கேற்றதில் உள் நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை" என்றுத் தெரிவித்தார்.
English Summary
ntk leader seeman speech about tvk leader vijay