நடிகை பகிர்ந்த அதிர்ச்சி தகவல்....பிருத்விராஜ் படப்பிடிப்பில் 16 சிறுமி, தாய்க்கு பாலியல் தொல்லை! - Seithipunal
Seithipunal


ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் குழு,  சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மூலம் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல்  புகார்கள் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  இதில் மேற்கு வங்க மாநில நடிகை ஸ்ரீ லேகா மித்ரா, மலையாள நடிகர், இயக்குனர் மற்றும் கேரள திரைப்பட அகாடமியின் தலைவர் மீது பகிரங்க பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இதேபோல், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொது செயலாளர் நடிகர் சித்திக் மீது நடிகை ரேவதி பாலியல் புகார் கூறினார்.  இதுவரை,  இயக்குனர்கள் ரஞ்சித், துளசிதாஸ், வி.கே. பிரகாஷ் மற்றும் நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான், பாபுராஜ், முகேஷ், ஜெயசூர்யா, மற்றும் தயாரிப்பு நிர்வாகிகள் நோபல், விச்சு, விளம்பர இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 2008-ம் ஆண்டு ஒன் வே டிக்கெட் என்ற படம் வெளியானது. இதில் பிபின் பிரபாகர் இயக்கத்தில், நடிகர் பிருத்விராஜ் மற்றும் பாமா ஆகியோர் நாயகன், நாயகியாகவும், நடிகர் மம்முட்டி சிறப்பு தோற்றத்திலும் நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த திடுக்கிடும் சம்பவம் பற்றிய தகவல் வெளிவந்து உள்ளது.

இதுபற்றி நடிகை ஒருவர் கூறுகையில், படப்பிடிப்பு தளத்திற்கு அருகே உள்ள அறையொன்றில் 16 வயது சிறுமி மற்றும் அவருடைய தாய் இரண்டு பேரும் கேமிராமேன்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என படக்குழுவை சேர்ந்த பலரும் அவர்கள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த வேதனையான சம்பவம் பற்றி அவர்கள் இருவரும் தன்னிடம் தெரிவித்து அழுததாக அந்த நடிகை தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking information shared by the actress 16 girl mother sexually harassed on the set of Prithviraj


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->