விரைவில் குறும்படம் வெளியாகும்: இயக்குனர் லோகேஷ் அதிரடி அறிவிப்பு!
Short Film Coming Soon Director Lokesh Announcement
மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது லோகேஷ் கனகராஜ் 'தலைவர் 171' படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். லோகேஷ் அவரது 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியான 'ஃபைட் கிளப்' திரைப்படத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
![](https://img.seithipunal.com/media/lokesh-pbef7.jpg)
மேலும் அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் சிறிது காலம் ஓய்வெடுக்க போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் பேசியபோது தெரிவித்திருப்பதாவது, '30 நாட்கள் ஓய்வெடுக்க சென்றிருந்தேன்.
சும்மா இருக்க முடியவில்லை. அதனால் ஒரு குறும்படம் இயக்கியுள்ளேன். அது விரைவில் வெளியாக உள்ளது. ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்' என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சினிமா வட்டாரங்கள் எல்சியூ குறித்த குறும்படமாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றது.
English Summary
Short Film Coming Soon Director Lokesh Announcement