இரு உயிர்களை பறித்த உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ்! பெரும் சோக சம்பவம்!
Maharastra 108 Ambulance Accident
மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் அருகே, வேகமாக வந்த ஆம்புலன்ஸ் இரண்டு பாதசாரிகளை மோதியதில், இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 7 மணியளவில், ஹடோல்டி மற்றும் வல்சங்கி கிராமங்களுக்கு இடையே இந்த கோர விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்து குறித்து காவல்துறை தரப்பில் விடுத்துள்ள அறிக்கையில், “சாயா மனோகர் குர்மே (55) மற்றும் அவரது மைத்துனர் பாபுராவ் கும்ரே (70) இருவரும் சாலையை கடக்க முயன்றபோது, ஹடோல்டியிலிருந்து ஷிரூர் தாஜ்பந்திற்குச் சென்ற ஆம்புலன்ஸ் திடீரென அவர்கள் மீது மோதியது.
அதில், சாயா குர்மே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாபுராவ் கும்ரே, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்,” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Maharastra 108 Ambulance Accident