விஜய்க்கு பாதுகாப்பு அளித்தால் ஆதரவு அளித்து விடுவாரா? சீமான் கேள்வி..!
Will Vijay support us if we provide security Seeman asked
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு 'Y' பிரிவு உயர் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.யுள்ளது. இது குறித்து சீமான் அவர்கள் ''பாதுகாப்பு அளிப்பதால், பா.ஜ.க விற்கு விஜய் ஆதரவு அளித்து விடுவாரா,'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்; 'விஜய்க்கு மட்டும் தனியாக பாதுகாப்பு அளிக்கப்படவில்லை அண்ணாமலைக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் கேட்டு வாங்குகின்றனர். எங்களுக்கு தேவையில்லை என்பதால் அதனை பொருட்படுத்தவில்லை' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
![](https://img.seithipunal.com/media/see-bsmnz.jpg)
அத்துடன் அவர் 'நான் தான் நாட்டிற்கு பாதுகாப்பு என நினைப்பேன். எனக்கு எதற்கு பாதுகாப்பு என கேட்டேன். போலீசார் வந்தால், தயவு செய்து சென்று விடுங்கள் எனக்கூறியுள்ளேன். என்னைப் போல் நின்று பேசுவது விஜய்க்கு கடினம். இதனால், பாதுகாப்பை கேட்டு வாங்கியிருக்கலாம். பாதுகாப்பு அளித்தால் பா.ஜ.க,விற்கு விஜய் ஆதரவு அளித்துவிடுவாரா? பா.ஜ.க,வில் இருக்கும் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிப்பது ஏன்? என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 'இதுவரை முஸ்லிம்கள் எனக்கு ஓட்டுப்போடவில்லை.நான் நாட்டிற்கானவன். மண்ணுக்கானவனர். மக்களுக்கானவன். ஓட்டுப்போட்டால் போடு போடா விட்டால் போகட்டும்.எனது மரணம் வலிக்காது. எனது பிறவிக்கடனை அடைத்து வருகிறேன். ஓட்டுக்கு பணம் கொடுத்து சந்தையாக்கிவிட்டீர்கள்.
நாங்கள் ஓட்டுப்பிச்சை எடுக்கிறோம் என்றால், நீங்கள் என்ன செய்கிறீர்கள்' என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் 'உங்களுக்கு அவர்களாகவே வந்து ஓட்டுப் போட்டு விட்டு செல்கிறார்களா? கள்ளச்சாராய விற்பனையை தடுக்கப் போனவர்களை கொலை செய்ததைவிட, முன் விரோதத்தால் கொலை செய்யப்பட்டனர் எனக்கூறியது வேதனை அளிக்கிறது எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/seevi-nugj4.jpg)
அத்துடன், 'தேர்தல் வியூகம் என்பது வியாபாரமாக உள்ளது. இது தேர்தல் அரசியல் தான். மக்கள் அரசியல் எப்போது வரும்.விஜய்க்கு இரு தேர்தல் பிரசார வியூக நிபுணர்கள் உள்ளனர். வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் வியூக வகுப்பார்கள் வந்தால், தமிழர்கள் குறித்து தெரியுமா? கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு வியூக நிபுணர்கள் தேவைப்படவில்லை.
திமுக, அதிமுக மூத்த தலைவர்களை தாண்டி பிரசாந்த் கிஷோர் கொம்பனா? பீஹாரில் நடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற முடியவில்லை' எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும். 'பீஹாரைச் சேர்ந்தவருக்கு அறிவு உளளது. தமிழகத்தை சேர்ந்தவனுக்கு அறிவில்லையா? இங்கேயே பெரிய அறிஞர்கள் உள்ளனர். அவர்களை பயன்படுத்தலாம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
English Summary
Will Vijay support us if we provide security Seeman asked