"எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல" மத்திய அமைச்சருக்கு பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!
TN Schools Education Fund Anbil Mahesh
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல் கல்வி நிதி தர முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெற்றியளித்த நிலையில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசும் ஆடியோ கிளிப் ஒன்றை மத்திய அமைச்சருக்கு பதிலடியாக அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.
அதில், வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்?
மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்?
அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம்.
உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல,
இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல.
எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல.
" இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும். " என்று முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசி இருக்கிறார்.
English Summary
TN Schools Education Fund Anbil Mahesh