மாநாடு பட 2- ஆம் பாகம் குறித்த தகவலை வெளியிட்ட சிம்பு.! ரசிகர்கள் குஷி.!  - Seithipunal
Seithipunal


நடிகர் சிம்பு நடிப்பில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் சிம்பு, "புதுப்புது வித்தியாசமான கதைகளில் நடிக்க நான் விரும்புகிறேன். 

மாநாடு திரைப்படம் அந்த முயற்சியில் தான் வந்தது. இதனால் வெற்றியும் பெற்றது. மாநாடு படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதுபோல வேறொரு மாறுபட்ட கதை அம்சத்தை கொண்டதுதான் வெந்து தணிந்தது காடு திரைப்படம். இந்த படம் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது.

இதில் சினிமா தனமாக இல்லாமல் எதார்த்தமாக நடித்திருக்கிறேன். மூன்று தோற்றங்களில் நடித்திருக்கிறேன். 19 வயது இளைஞனாக என்னை அந்த கதையில் உருமாற்றி இருக்கிறேன். ரசிகர்களுக்கு பிடித்த பல்வேறு அம்சங்கள் வெந்து தணிந்தது காடு படத்தில் இருக்கிறது.

ஒருவேளை இந்த படம் வெற்றி பெற்றால் இரண்டாவது பாகமும் வெளிவர வாய்ப்புள்ளது." என்று கூறியுள்ளார். இதில் சிம்பு மாநாடு படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு படுகுஷியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simbu Speech about manadu 2


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->