சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது.?! ஆளே அடையாளம் தெரியாம வளர்ந்த டீன் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் வெற்றி படங்களில் ஒன்று சிறுத்தை. இத்திரைப்படத்தை சிவா இயக்கியிருந்தார். கார்த்தி இரட்டை வேடத்தில் இந்தத் திரைப்படத்தில் நடித்திருப்பார். மேலும் அவருடன் தமன்னா, சந்தானம் உள்ளிட்டவர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குனர் சிவா இன்றுவரை சிறுத்தை சிவா என்றே அழைக்கப்பட்டு வருகிறார். அந்த அளவுக்கு சிவாவின் கேரியரிலும் கார்த்தியின் கேரியரிலும் மிக முக்கிய படமாக இது அமைந்தது.

நகைச்சுவை, ஆக்சன், சென்டிமென்ட் என ஒரு பக்கா மாஸ் என்டர்டைன்மென்டாக இந்தப் படம் அமைந்திருந்தது. இந்தத் திரைப்படத்தில் கார்த்தியின் குழந்தையாக நடித்திருந்தவர் பேபி ரக்ஷனா. அழகான அமைதியான நடிப்பை அந்த படத்தில் கொடுத்திருப்பார். ஒரு வாக்மேனில் அம்மா பாட்டை கேட்டுக் கொண்டே வரும் இவரது முகத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

தற்போது இந்த குழந்தை நன்றாக வளர்ந்து க்யூட்டாக இருக்கிறார். சிறுத்தை படத்தில் வந்த பேபி ரக்ஷனாவா இது? என்று கேட்குமளவிற்கு ஆளே மாறி போயிருக்கும் இவரது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

siruthai movie fame rakshana picture went viral in internet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->