கணவருக்கு கிடைத்த அங்கீகாரம்.. சித்து மனைவி ஸ்ரேயா மகிழ்ச்சி தகவல்.!  - Seithipunal
Seithipunal


கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று தான் திருமணம். இந்த சீரியலில் நடிகர் சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் நடித்திருப்பார்கள். இவர்களது ரொமான்டிக் காட்சிகளுக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

சீரியலை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் காதலர்களாக இருந்து சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் இருவரும் ஜோடியாக இணைந்து சீரியலில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் தனித்தனியாக தங்களது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். 

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் சரவணன் கதாபாத்திரத்தில் சித்து தற்போது நடித்து வருகிறார். ஸ்ரேயா ஜீ தமிழ் ரஜினி சீரியலில் நடித்து வருகிறார். 

இத்தகைய நிலையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் அவார்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சித்துவிற்கு சிறந்த மகனுக்கான விருதை விஜய் டிவி வழங்கியுள்ளது. இதனை அவரது மனைவி ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சித்துவுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று கூறி தனது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sithu shreya happy moment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->