விஜயின் GOAT படத்தில் சிவகார்த்திகேயன்.. வெளியான புதிய தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வசூல் மன்னனாக இருப்பவர் நடிகர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் GOAT உட்பட மேலும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க உள்ளதாக அறிவித்தார்.

இது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரையுமே அதிர்ச்சியடையச் செய்தது. மேலும் விஜயின் இந்த முடிவு GOAT படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் மீனாட்சி சௌத்திரி, பிரபுதேவா, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரசாந்த், ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் சில VFX காட்சிகளுக்காக விஜய் மற்றும் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்று வந்ததும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

படம் முடியும் தருவாயில் படத்தில் சிவகார்த்திகேயனும் நடித்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் கிரிக்கெட் மைதானத்தில் இருப்பது போன்ற காட்சிகளை வெங்கட் பிரபு படமாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது மேலும் படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் GOAT திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan in thalapathi vijay's GOAT movie


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->