பூஜையுடன் தொடங்கிய SK-23 படப்பிடிப்பு!
sk23 started shooting today
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக எஸ்கே 23 என பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ லட்சுமி மூவிஸ் பேனரில் திருப்பதி பிரசாத் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்புகளை ஏ.ஆர். முருகதாஸ் தொடங்கியுள்ளார்.

இந்த படபிடிப்பில் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். இந்த திரைப்படத்தில் நடிகை ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
sk23 started shooting today