காதலனை திருமணம் செய்துகொண்ட நடிகை 'அபிநயா'...பிரமாண்டமாக நடைபெற்ற திருமணம்..!!! - Seithipunal
Seithipunal


நடிகை 'அபிநயா'அவர்கள் தமிழில் நாடோடிகள், சீதம்மா வகிட்லோ சிரிமல்லி சேத்து, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் ஈர்க்கப்பட்டவர். அண்மையில் மலையாள திரைப்படமான 'பணி' திரைப்படத்தில் 'ஜோஜு ஜார்ஜ்' மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தின் மூலம் அவர்மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.அப்படிப்பட்ட நடிகை 'அபிநயா'  கடந்த மாதம், அவரது நீண்ட நாள் காதலனான 'கார்த்திக்'  அவர்களை திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் அவர்கள் இருவருக்கும் நிச்சயம் நடைப்பெற்றதையும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, இன்று அவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாந முறையில் நடைப்பெற்றது. மேலும், திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அபிநயா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி, திரைப்பிரபலங்களும் மற்றும் ரசிகர்களும் அவர்களை வாழ்த்தி வருகின்றனர்.அவர் தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக தமிழில் சுந்தர்.சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Abhinaya marries her boyfriend grand wedding


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->