ஜன.19ல் விஜயகாந்துக்கு நினைவேந்தல் கூட்டம்.! தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தேமுதிக தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக டிசம்பர் 28ஆம் தேதி மறைந்தார். அவரது உடல் அரசு மரியாதை உடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் நாள்தோறும் திரை பிரபலங்கள, பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூர்யா, கார்த்தி, சிவகுமார், சிவகார்த்திகேயன், சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் நினைவேந்தல் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

தன்புகழையும், திறமையும், சிந்தனையையும் மக்களுக்காக அர்ப்பணித்த எங்கள் சங்கத்தின் பெருந்தூணாய் விளங்கிய எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடிகர் சங்கம் சார்பில் நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் நினைவேந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Indian Actors association announced Memorial meeting for Vijayakanth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->