படத்துல மட்டும்.. மீண்டும் அஜித்தின் வலிமை குறித்து மோசமான கருத்து கூறிய சீரியல் நடிகை.!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியின் 7சி சீரியலின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீநிதி. குழந்தை நட்சத்திரமாக இவர் நிறைய சீரியல்களில் நடித்து இருக்கிறார். யாரடி நீ மோகினி, புது புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தார். 

இவர் பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கும் நிலையில், சோசியல் மீடியாக்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருவார். இவர் சில மாதங்களுக்கு முன்பு அஜித்தின் வலிமை படம் குறித்து கூறி பிரச்சினையில் சிக்கிக்கொண்டார். அஜித் ரசிகர்கள் இவரை மோசமாக வசைபாடினர். 

பின்னர் சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இவர் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலிமை படம் குறித்து ஒரு விமர்சனத்தை வைத்துள்ளார். 

அதில், "விமர்சனம் செய்யும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. வலிமை ஒரு படம் என்பதால் அதை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். என்னை எப்போது கேட்டாலும் நான் வலிமை சுமாரான படம் என்று தான் கூறுவேன். படம் எனக்கு பிடிக்கவில்லை. 

ஆனால் வலிமை படம் இந்த சமுதாயத்திற்கு தேவையான படம். சமுதாயத்தில் அதிக போதைப்பொருள் பழக்கம் அதிகரித்திருக்கிறது. அதிலிருந்து காப்பாற்ற நாம் தான் முயற்சிக்க வேண்டும். படத்தில் காட்டியது போல எந்த ஹீரோவும் வரமாட்டார்கள்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srinithi about ajiths valimai movie


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->