விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் புகைப்படம் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் புகைப்படம் வெளியீடு.!

சின்னத்திரை நடிகர் மற்றும் பிக்பாஸ் பிரபலமான கவின் லிஃப்ட் படத்தின் மூலம் நாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். அதன் பின்னர், இவர் நடிப்பில் வெளிவந்த "டாடா" திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்தப் படத்தைத் தொடர்ந்து, நடிகர் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தற்போது, இவர் நடன இயக்குநர் சதீஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். 

இதையடுத்து பியார் பிரேமா காதல் பட இயக்குநர் இலனுடம் ஸ்டார் என்ற திரைப்படத்தில் கவின் ஒப்பந்தமாகி உள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்த நிலையில், இன்று விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்டார் படக்குழு, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

star movie photos released


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->