காதலியை பார்க்க வீட்டிற்குச் சென்ற வாலிபர் - துப்பாக்கியால் சுட்டுக் கொலை.!!
man died for gun shoot in uttar pradesh
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள எட்டாவா மாவட்டம் கெடலேகு கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து வாலிபர் நள்ளிரவு நேரத்தில் தனது காதலியின் வீட்டுக்குள் புகுந்து அவளை சந்திப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், நள்ளிரவில் வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து தனது மகளை சந்தித்து செல்வது சிறுமியின் தந்தைக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வாலிபருக்கு தக்க தண்டனை கொடுக்க நினைத்தார். அதன்படி வழக்கம்போல் அந்த வாலிபர், தனது காதலியின் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து நுழைந்தார்.

அப்போது வீட்டு வாசலில் காத்திருந்த சிறுமியின் தந்தை, வாலிபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் வாலிபரின் உடலில் குண்டு பாய்ந்து படுகாயம் ஏற்பட்டது. இதனால், வாலிபர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
man died for gun shoot in uttar pradesh