நுனி முடி வெடிப்புகள் மறைய இந்த ஒரு டிப்ஸ் பாலொவ் பண்ணுங்க போதும்!
Just follow these tips to get rid of hair split ends
avacado (வெண்ணெய் பழம்):
1 .அவகேடோவை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.இதனுடன் 2 ஸ்பூன் காய்ச்சாத பச்சை பாலை சேர்த்து கலக்கவும்.இந்த கலவையை உங்கள் தலை முடியில் தடவி 30 நிமிடங்கள் நன்றாக ஊற விடவும்.பிறகு நீங்கள் உபயோகப்படுத்தும் ஷாம்பூவால் தலையை அலசவும். மாதத்தில் 2 முறை இந்த வழியை பின்பற்றி வருவதால் உங்கள் நுனி முடி வெடிப்புகள் சில நாட்களில் மறையும்.

2 .அவகேடோ மற்றும் வாழை பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும். இவற்றுடன் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும்.இந்த கலவையை தலையில் தடவி 1 மணி நேரம் நன்றாக ஊற விடவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு, மென்மையான ஷாம்பூவால் தலையை அலசவும்.வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்து வருவதால் விரைவில் தலைமுடி நுனி வெடிப்புகள் காணாமல் போகும்.
English Summary
Just follow these tips to get rid of hair split ends