'ஷூட்டிங் ஸ்பாட்ல கொடூரமா அடிப்பாங்க.' சீரியல் நடிகை பகிர்ந்த துயரங்கள்.!  - Seithipunal
Seithipunal


சின்னத்திரை உலகில் வில்லி கதாபாத்திரத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருந்தவர்  சில்பா. சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி தொடரின் மூலம் தனது முத்திரையை சின்னத்திரை உலகில் பதித்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் சினிமா மற்றும் மீடியா துறைகளிலிருக்கும்  அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி துணிவுடன் பேசி இருக்கிறார். அட்ஜஸ்ட்மெண்ட் பற்றிய இவரது பேட்டி தற்போது வைரலாகி இருக்கிறது.

இந்நிலையில், அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியுள்ள இவர் "யாராவது உங்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் என்று கேட்டால் உங்களுக்கு இருக்கக்கூடிய சாய்ஸ் இரண்டு தான் ஒன்று 'எஸ்' அல்லது 'நோ'. அதை விட்டுவிட்டு ஒட்டுமொத்த சினிமா மற்றும் சீரியல் துறைகளை குறை சொல்வது சரிவராது" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது பற்றி பேசியிருக்கும் அவர் சில நேரங்களில் நாம் அவர்களின் ஆசைக்கு இணங்க மறுத்தால் அதனை வைத்து ஷூட்டிங் சமயங்களில் நம்மை பழி வாங்குவார்கள் எனவும் கூறி இருக்கிறார். உதாரணமாக அடிப்பது போன்று காட்சி இருந்தால் நிஜமாகவே அடிக்க வைப்பார்கள் என்றும், திட்டுவது போன்ற காட்சி அமைப்பு இருந்தால் மிகவும் கேவலமான வார்த்தைகளால் திட்ட வைப்பார்கள் எனவும் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். 

ஆனால் இது போன்ற ஆட்களுக்கு மத்தியிலும் சூட்டிங் என்பது தன் சேலையில் தீப்பிடித்த நிலையில் தனது உயிரையும் துச்சமாக மதித்து ஒரு இயக்குனர் தான் தன்னை காப்பாற்றியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sun tv fame shilpa talking about adjustment in serial industry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->