மாரி செல்வராஜுடன் இணையும் சூப்பர் ஸ்டார்?......இதோ மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட்! - Seithipunal
Seithipunal


இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில்  உருவாகியுள்ள 'வாழை' திரைப்படம், நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மேலும்  இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்க, நடிகைகள் திவ்யா துரைசாமி, நிகிலா விமல் மற்றும் சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தநிலையில், 'வாழை' படத்தினை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமுடன் இணைந்து 'பைசன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கிடையே சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினியும் நானும் சேர்ந்து ஒரு படம் பண்ண விரும்புகிறோம் என்ரூ கூறினார்.

மேலும், . என் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற திரைப்படங்களைப் பார்த்துவிட்டு, நடிகர்  ரஜினி என்னை அழைத்ததாகவும், மேலும், எங்களுடைய அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Superstar joining Mari Selvaraj Here is the update given by Mari Selvaraj


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->