ஓடிடி தொடரில் களமிறங்கும் நடிகர் சூரி - Seithipunal
Seithipunal


நகைச்சுவை நடிகராக மட்டுமே நடித்து வந்த சூரி, விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து தனது அதிரடியான பரிமாணத்தின்  மூலம் பார்வையாளர்களை மிரளவைத்தார்.

இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கினார்.  தொடர்ந்து கருடன் படத்தில் சூரியின் வெறித்தனமான நடிப்பு அவரை தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தொடர்ந்து இனி ஹீரோ சப்ஜெக்ட் படத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று சூரி  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இவரின் விடுதலை 2, கொட்டுக்காளி, ஏழு மலை ஏழு கடல் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்த படங்கள் சர்வதேச விழாக்களில் அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதில், கூழாங்கல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகப்பெரிய கவனம் பெற்ற இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ், இவரது இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன் தயாரிப்பில் சூரி, அன்னா பெண் நடித்துள்ள படம் கொட்டுக்காளி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சூரியின் அடுத்த நகர்வு குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, மதுரையை பின்னணியாக கொண்டு உருவாகும் கதை ஒன்றை நடிகர் சூரி எழுதி வருவதாகவும், இந்த கதையை ஓடிடி  தொடராக தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் முருகேசன் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suri is an actor who is debuting in OTT series


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->