மீண்டும் இணையும் 'சூரைப்போற்று' கூட்டணி.. இசையமைப்பாளர் கொடுத்த சூசக அப்டேட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படம் டிசம்பர் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

அதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.

அதன் காரணமாக நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்திற்கு முன்பு இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வரும் ஜூலை 23ம் தேதி சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.


அதேபோல் இந்த திரைப்படம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் 100வது திரைப்படமாக உருவாக உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் 100வது திரைப்படம் விரைவில் என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suriya again act in sudha kongara Direction


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->