'ப்ரண்ட்ஸ்' பட இயக்குநர் சித்திக் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல்.! - Seithipunal
Seithipunal


பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இஸ்மாயில் மலையாள சினிமாவில் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் மலையாளம் மட்டுமில்லாமல் தமிழிலும் ஒரு சில சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அதன்படி விஜய்-சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிரெண்ட்ஸ், விஜயகாந்தின் எங்கள் அண்ணா போன்ற சூப்பர் ஹிட் படங்களை இவர்தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சித்திக், நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, பிரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், "பிரண்ட்ஸ் திரைப்படம் எனக்கு முக்கியமான படமாக அமைந்தது. இயல்பாகவே ஊக்கமளிக்கும் மனிதர் சித்திக் சார். நடிப்பில் சிறிய முன்னேற்றம் தெரிந்தாலும் உடனே நடிகர்களை பாராட்டுபவர். படப்பிடிப்பின் போதும் சரி எடிட் செய்யும்போதும் சரி, எனது நடிப்பு குறித்த தனது கருத்துக்களை நிபந்தனையற்ற அன்புடன் தெரிவிப்பார். படப்பிடிப்பில் அவர் கோபமாகவோ, குரலை உயர்த்தியோ நான் பார்த்ததில்லை. அவருடன் பணி புரிவது என்றென்றும் நான் குடும்பம் அனுபவம். நடிகராக நான் உருவான காலத்தில் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி. நீங்கள் அளித்த அன்பும் உங்களின் நினைவுகளும், எதிர்காலத்திலும் எங்களுடன் பயணிக்கும்" என தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suriya condolences to director siddique passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->