சூரியவம்சம் பார்ட் 2? சமூக ஊடகங்களில் பரவும் பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த 1997ஆம் ஆண்டு சரத்குமார், தேவயானி, ராதிகா, மணிவண்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வெளியான திரைப்படம் “சூர்ய வம்சம்”. இதில் தந்தை, மகன் என இருவேறு கதாபாத்திரங்களில் சரத்குமார் நடித்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற "ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ", "நட்சத்திர ஜன்னலில்" உள்ளிட்ட பாடல்கள் ஹிட்டடித்தன. இப்படத்தை பிரபல இயக்குநர் விக்ரமன் இயக்கியிருந்தார். அன்றைய காலத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம், வெளியாகி தற்போது 25 ஆண்டுகளை கடந்துள்ளது.

பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி. செளத்ரி தயாரித்திருந்த இந்தப்படத்திற்கு, எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். மேலும் 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த படமான சூர்ய வம்சம், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தொடர்ந்து கன்டென்டுகளை கொடுத்து வருகிறது.

இப்படிப்பட்ட சூர்யவம்சம் படத்தின் இராண்டாம் பாகம் வெளிவர இருப்பதாக அண்மையில் நடிகர் சரத்குமார் தெரிவித்திருந்தார். இது ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது, சூர்யவம்சம் பார்ட் 2 தயாராகிறது என்றும், இப்படத்தை பிரபல இயக்குனர் KS ரவிக்குமார் இயக்குகிறார் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suriyavamsam Part 2 is reported to be directed by KS Ravikumar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->