ஹிந்தியை எதிர்க்கும் சூர்யா? வெளியான சூப்பர் அப்டேட்! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவரது 43வது திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்க உள்ளார். 

இதற்கு முன்னதாக சுதா கொங்காரா இயக்கிய 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யா தேசிய விருது பெற்றிருந்தார். இந்த கூட்டணி மீண்டும் இணைய ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

மேலும் இந்த திரைப்படத்திற்கு புறநானூறு என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர். இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதில் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஜனவரி மாதம் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் துவங்க உள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா கல்லூரி மாணவராகவும் இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

'கங்குவா' திரைப்படத்தை முடித்துவிட்டு பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Surya 43 update released


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->