பயில்வானுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் சுசித்ரா.. நடப்பது என்ன? உச்சகட்ட எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


பத்திரிக்கையாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பயில்வான் ரங்கநாதன் நடிகைகள் குறித்து அவதூறாக பேசிய பல வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. 

அவர் கூறுவதை கேட்க பலரும் இருப்பதால், அவர் கூறும் வார்த்தைகளை உண்மை என்று நம்பி நடிகைகளின் பெயரை குறைத்துக் கூறியதை தொடர்ந்து, சினிமா துறையில் பணியாற்றுபவர்கள் குறித்து அனைத்தும் தெரிந்தது போல பேசியுள்ளார்.

தொடர்ந்து விமர்சனம் என்ற பெயரில் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக பயில்வான் ரங்கநாதன் தொடக்கத்தில் பேசிய நிலையில், சமீப காலமாக மிகவும் கொச்சையான முறையில் பேசியிருக்கிறார்.கோலிவுட் திரையுலகில் ஏதேனும் நடக்கின்ற பட்சத்தில் அதற்கு என்ன காரணம்? என்ன நடந்தது? என்று பல சரமாரி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் அவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், பாடகி சுசித்ரா குறித்தும் அவர் தரக்குறைவாக பேசிய வீடியோ வெளியாகியிருந்தது. 

இது தொடர்பாக காவல் நிலையத்தில் சுசித்ரா புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் எவ்வித ஆதாரமும் இல்லாமல் தன் மீது அவதூறு பேசி வீடியோ வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் தனது புகழுக்கு கைவிரிப்பு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், உண்மைக்கு புறம்பாக பேசிய அவர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான உரையாடல் ஆடியோ வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Susithra complaint against bayilvan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->