அமெரிக்காவில் இருந்து நலமுடன் சென்னை திரும்பினார் டி.ராஜேந்தர்.!
T Rajendar return to Chennai
டி.ராஜேந்தர் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு நலமுடன் சென்னை திரும்பினார்.
நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மே மாதம் 19-ம்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கந்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா சென்றார்.
சமீபத்தில் அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு டி.ராஜேந்தர் குடும்பத்தாருடன் ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் டி.ராஜேந்தர் இன்று அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.
English Summary
T Rajendar return to Chennai