அமைதி, நல்லிணக்கத்தை குலைக்க ஃபெப்சி முயற்சி செய்வதாக நடிகர் சங்கம் கண்டனம்! - Seithipunal
Seithipunal


திரைத்துறையில் நிலவும் பொது அமைதி மற்றும் நல்லிணக்கத்தை குலைக்க ஃபெப்சி முயற்சி செய்வதாக நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திரைத்துறை சிக்கல்களுக்கு ஃபெப்சி நிர்வாகமே தீர்வு காண்பது போல் மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. 

ஃபெப்சி நிர்வாகத்தின் வரம்பு கடந்த செயல்பாடுகள், வீண் சர்ச்சை ஏற்படுத்தும் அறிக்கைகளுக்கு நடிகர் சங்கம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

ஃபெப்சி தங்களை அதிகார மையமாக சித்தரித்து, பிற சங்கங்களின் அலுவல்களில் தலையிட்டு வருவதாகவும் நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், தனுஷ் விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய கூட்டுக்குழு அமைக்க ஃபெப்சி வலியுறுத்தி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. 

தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இடையேயான சிக்கல்களை இரு அமைப்புகளும் சமூகமாக கையாண்டு வருகின்றது என்றும் நடிகர் சங்கம் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Cinema FEFSI vs Actor and Producer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->