10 படம், ரூ.2250 கோடிக்கு மேல் வசூல்! தமிழ் சினிமாவின் புதிய சாதனை! - Seithipunal
Seithipunal


ஹாலிவுட் அளவிற்கு இல்லை என்றாலும், தற்போது இந்தியவின் உச்சநட்சத்திரங்களின் திரைப்படங்கள் ரூ.1,000 கோடி வசூலித்து அசதி வருகிறது.

இதில் தெந்திய திரைப்படங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. தமிழ் திரைப்படங்களை பொறுத்தவரை நடப்பு 2023 ஆம் ஆண்டு வெளியான படங்கள், எப்போது இல்லாத அளவிற்கு வசூலில் புதிய சாதனைகளை படைத்துள்ளது.

அதில் இந்தாண்டு துவக்கத்தில் வெளியான நடிகர் அஜித்தின் 'துணிவு' படம் ரூ.200 கோடியும், விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ.300 கோடியும் வசூலித்தன. 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் - 2 ரூ.400 கோடி வரை வசூல் செய்தது. நடிகர் ரஜினியின் ஜெய்லர் ரூ.600 கோடியையும், அண்மையில் வெளியான விஜய்யின் லியோ ரூ.400 கோடியும் வசூலித்துள்ளது.

வாத்தி, மார்க் ஆண்டனி படங்கள் தலா ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தன. சிவகார்த்திகேயனின் மாவீரன் ரூ.85 கோடியும், உதயநிதியின் மாமன்னன் ரூ.50 கோடியும் வசூலித்தது.

சித்தார்த்தின் 'சித்தா' திரைப்படமும் உலகளவில் ரூ.30 கோடி வசூலிக்க, இந்தாண்டில் இந்த 10 தமிழ்ப் படங்கள் மட்டும்  ரூ.2250 கோடிக்கு மேல் வசூலித்து, தென்னிந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட் கொண்ட சினிமா துறையாக தமிழ் சினிமா உருமாறியுள்ளது.

தனுஷின் கேப்டன் மில்லர், ஜிகர்தண்டா - 2 உள்ளிட்ட படங்களும் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாக உள்ளதால், 2500 கோடிகளை திமில் சினிமா துறை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil cinema industry reach 2500 cr collection


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->