#BREAKING:: "கேப்டன் மில்லர்" படத்தின் படப்பிடிப்பிற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி..!! - Seithipunal
Seithipunal


தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை அருள் மாதேஸ்வரன் இயக்க நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கின்றார். மேலும் சந்தீப் கிஷான் மற்றும் நிவேதா சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். 

இந்த நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடந்த மூன்று மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கடந்த 25ஆம் தேதி குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது குண்டு சத்தம் கேட்டதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்தனர். அதன் பின்னர் அங்கு சென்று பார்த்தபோது படப்பிடிப்பு நடைபெற்று வருவது தெரியவந்தது.இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்த படப்பிடிப்பு நடைபெற்ற பகுதி வனத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் படக்குழு மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை என தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தென்காசியில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படதிற்கு அனுமதியின்றி படப்பிடிப்பு நடைபெற்றதாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிக சத்தத்துடன் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது உரிய அனுமதி பெற்று மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ்களை பட குழுவினர் சமர்ப்பித்ததால் அனுமதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாளை காலை முதல் மீண்டும் நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi District Collector gives permission for Captain Miller shooting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->