வசனத்துடன் வெளியானது தலைவர் 170 படத்தின் தலைப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ரஜினிகாந்த். பல படங்களில், பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த இவர் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் லைகா தயாரிப்பில், ஞானவேல் ராஜா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

"தலைவர் 170" என்ற பெயரில் உருவாகி வரும் இந்த படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ரஜினி பிறந்தநாளான இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிவிப்பின் படி, ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு 'வேட்டையன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பெயர் குறித்த டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. "குறி வச்சா இரை விழணும்' என்ற வசனத்துடன் படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

அதாவது, ரஜினிகாந்தின் புதிய படத்திற்கு "வேட்டையன்" என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் பெயர் குறித்த டீசர் வீடியோவை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalaivar 170 movie name and teaser released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->