அதிகாலையிலேயே அதிர்ச்சி - தளபதி 68 பட பிரபலம் திடீர் மரணம்.! - Seithipunal
Seithipunal


இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், தனது 68-வது படத்தில் நடித்து வருகிறார். படத்தில் நடிகர்கள் ஜெயராம், மோகன், லைலா, சினேகா எனப் பலரும் இருக்கும் நிலையில், சமீபத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியாகி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இந்தப் படத்திற்கு ‘பாஸ், ஃபஸூல்’ என்று டைட்டில் வைக்க இருப்பதாகச் செய்திகள் வெளியானது. ஆனால், இதற்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மறுப்புத் தெரிவித்து, விரைவில் படத்தின் அப்டேட் தர இருக்கிறோம் என்பதையும் தெரிவித்தார். 

இதையடுத்து விஜய் ரசிகர்கள் புத்தாண்டை முன்னிட்டு ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் லுக் வெளியாகும் என ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், படத்தயாரிப்பு குழுமமமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஒருவரான ஜாய்சன் இன்று காலை திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். 

இந்த திடீர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இயக்குநர் வெங்கட்பிரபு தனது சோகத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும், உடல்நலத்தில் கவனம் செலுத்தக் கூடியவர் ஜாய்சன் என்று அவரது நண்பர்களும் தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thalapathy 68 movie celebrity passed away


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->