தளபதி 68 படத்தின் முக்கிய அப்டேட்! விமானம் ஏறிய விஜய்!
thalapathy 68 update soon
நடிகர் விஜயின் லியோ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் பாதியில் படம் மரண மாஸாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி சரியாக வரவில்லை என்றும் பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் பணிகளை தொடங்க நேரம் வந்துவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கல்பாத்தி எஸ் அகோரம் அறிவித்திருந்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 -க்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது.
அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில், 'லியோ' படத்தின் ரிலீஸுக்கு பின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருவதாகவும், இதற்காக இன்று காலையே விமானம் மூலம் விஜய் தென் ஆப்ரிக்கா சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகும் என்று தெரிகிறது.
English Summary
thalapathy 68 update soon